அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகனை ஓ.பன்னீர்செல்வம் இன்று நியமித்தார். செந்தில் முருகனை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக ஓபிஎஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்த புதிய நியமனங்களை வெளியிட்டு வருகிறார். அந்த அடிப்படையில், அதிமுகவின் அமைப்பு செயலாளராக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செந்தில் முருகன் இன்று நியமிக்கப்படுவார் என்று கூறியிருக்கிறார்.

மேலும், அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அதிமுகவின் தலைமை பொறுப்பாளரின் தகவலை இன்று காலை வெளியிட்டார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தினுடைய வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
அவரை அமைப்பு செயலாளராக நியமித்து தனது அறிக்கையின் வாயிலாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.