scorecardresearch

ஈரோடு கிழக்கில் எனது இளைய மகனுக்கு சீட் கேட்டு இருக்கிறேன்’: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட மறுப்பதால், அவரது இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கில் எனது இளைய மகனுக்கு சீட் கேட்டு இருக்கிறேன்’: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நிறுத்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இளங்கோவனை சந்தித்தும் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தினர். ஆனால் அவர் இதுகுறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தல் என்பதால் ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி எப்படியும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட திட்டமிட்டு வலியுறுத்தி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட மறுப்பதால், அவரது இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.

மறைந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கிழக்கு தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார். எனவே இவற்றை கணக்கில் கொண்டு காங்கிரஸ் மேலிடத்தில் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

வேட்புமனுத்தாக்கலுக்கு இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில், முறைப்படி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Erode east bypoll election nominating sanjay sampath

Best of Express