ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27 ஆம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 82,138 ஆண் வாக்காளர்கள், 88, 037 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலத்தினர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். தேர்தலில் மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லுாரியில் இன்று (மார்ச் 2)காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 160 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 60 வாக்குகள் பெற்றார். அதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திர வாக்குகள் ஒவ்வொரு சுற்று வாரியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இதில் முதல் சுற்று முடிவில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.
சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை முழு விவரம் இங்கே…
முதல் சுற்று முடிவு
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் -19,223
அதிமுக வேட்பாளர் தென்னரசு- 6,497
நாம் தமிழர் – 514
தேமுதிக – 90 வாக்குகள்
முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 11,020 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார்.
4வது சுற்று
4-வது சுற்று முடிவிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றது. அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 21 ஆயிரம் வாக்குகள் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்தார். நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்திலும் தேமுதிக 4-வது இடத்திலும் இருந்தன.
5வது சுற்று
காங்கிரஸ் – 39,751
அதிமுக- 13, 543
நாம் தமிழர் -2,032
தேமுதிக- 1,091
6வது சுற்று நிலவரம்
ஆறாவது சுற்றில் காங்., வேட்பாளர் இளங்கோவன் 46,179 ஒட்டுக்களும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,777, ஓட்டுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 2,443 ஓட்டுக்களும், தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 386 ஓட்டுக்களும் பெற்றனர்.
ஏழாவது சுற்று
ஏழாவது சுற்று முடிவில் காங்., வேட்பாளர் இளங்கோவன் 53,548 ஒட்டுக்களும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 19,936 ஓட்டுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,006 ஓட்டுக்களும், தே.மு.தி.க., வேட்பாளர் ஆனந்த் 492 ஓட்டுக்களும் பெற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“