ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானதையடுத்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சிகள், வேட்பாளர்கள் ஜனவரி 10 முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. ஜனவரி 10 முதல் 17-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. பொங்கல் பண்டிகை காரணமாக 10, 13, 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். 11, 12, 14, 15, 16 ஆகிய தேதிகள் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிகள் போட்டியிட வில்லை என அறிவித்துள்ளன.