தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியான தொகுதியில் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.
இதையும் படியுங்கள்: ரெட் ஜெயன்ட் பிரச்னை: ஸ்டாலின்- உதயநிதி மீது விஜிலன்ஸில் சவுக்கு சங்கர் புகார்
இந்தநிலையில், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. அதனுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil