scorecardresearch

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலிக்கு வந்துள்ளன.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலிக்கு வந்துள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற  தொகுதி காங்கிரஸ் எம். எல்.ஏ திருமகன் ஈவேரா கடந்த 4ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்தக் தொகுதி காலியாக உள்ளதாக இந்திய  தேர்தல் ஆணையம் கடந்த 11ம் தேதி அறிவித்தது.

இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற  தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதி வரும் பிப்ரவரி 27  என்று  இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு நகராட்சி  ஆணையர் சிவகுமார்,  தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்படுள்ளதாக,  தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா  சாகு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில்  தேர்தல் விதிமுறைகள் நடைமுறைகளுக்கு வந்துள்ளன. பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Erode east election ei rules there

Best of Express