/tamil-ie/media/media_files/uploads/2023/03/tamil-indian-express-2023-03-16T132746.983.jpg)
Erode (East) MLA E.V.K.S. Elangovan
நலமுடன் இருக்கிறேன், விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று மருத்துவமனையில் இருந்தவாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ வீடியோ வெளியிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைந்ததையடுத்து அங்கு கடந்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். இதையடுத்து 38 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 15-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் இன்று காலை இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
Erode East MLA #EVKSElangovan says he is fine and will be discharged soon. Earlier, a hospital bulletin noted that the senior Congress leader is recovering from congestive heart failure in ICU. The bulletin added that Elangovan has tested negative for #COVID19. @IndianExpresspic.twitter.com/prVlyEGZc5
— Janardhan Koushik (@koushiktweets) March 22, 2023
இதைத்தொடர்ந்து தற்போது இளங்கோவன் தன் உடல் நலம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். "நான் நலமுடன் இருக்கிறேன். விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன்" என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.