ஈரோடு மக்களவைத் தேர்தல் முடிவுகள் – 2024
39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் ஈரோடு 17-வது தொகுதியாகும். ஈரோடு தொகுதி இதுவரை 3 தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ளது. 2008-ல் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து பிரிந்து தனி மக்களைவை தொகுதியாக ஈரோடு பிரிக்கப்பட்டது. ஈரோடு மக்களவை 3 மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம் என 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகியவை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்ததாகும், குமாரபாளையம் நாமக்கல் மாவட்டத்தையும், காங்கேயம், தாராபுரம் திருப்பூர் மாவட்டதை சேர்ந்ததாகவும் உள்ளன.
ஈரோடு மக்களவைத் தொகுதி கடந்த கால தேர்தல் முடிவுகள்
2019 மக்களவை தேர்தல் முடிவுகள்
இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க.கவின் கணேசமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் 5,63,591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க வேட்பாளரான மணிமாறன் 3,52,973 வாக்குகள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரவணக்குமார் 47,719 வாக்குகள், நா.த.க சீதாலட்சுமி 39,010 வாக்குகள் பெற்றனர். இந்த நிலையில் எம்.பியாக இருந்த கணேசமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் நேரத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
2014 மக்களவை தேர்தல் முடிவுகள்
2014 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் செல்வக்குமார் சின்னையனிடம் கணேசமூர்த்தி தோல்வியை தழுவினார். 4,66,995 வாக்குகள் பெற்ற சின்னையன் வெற்றி பெற்று நாடாளுமன்ற சென்றார். ம.தி.மு.க கணேசமூர்த்தி 2,55,432 வாக்குகளும் , தி.மு.கவின் பவித்ரவல்லி 2,17,260 வாக்குகளும், காங்கிரஸில் போட்டியிட்ட கோபி 26,726 வாக்குகளும் பெற்றனர். இதை தவிர பி.எஸ்.பி சார்பில் போட்டியிட்ட சேதுபதி 5,917 வாக்குகள், ஆம் ஆத்மியைச் சேர்ந்த ஆர்.பி.மருதராஜா 4,654 வாக்குகள் பெற்றிருந்தனர்.
2009 மக்களவை தேர்தல் முடிவுகள்
ம.தி.மு.கவின் கணேசமூர்த்தி 2,84,148 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 2,34,812 வாக்குகளும், கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் பாலசுப்ரமணியம் 1,06,604 வாக்குகளும், தே.மு.தி.க முத்து வெங்கடேஷ்வரன் 91,008 வாக்குகளும், பா.ஜ.கவின் பழனிசாமி 8,429 வாக்குகளும் பெற்றனர்.
2024 தேர்தல் வேட்பாளர்கள்
இந்தியா கூட்டணியில் தி.மு.கவில்- கே.இ.பிரகாஷ்
அ.தி.மு.க- ஆற்றல் அசோக் குமார்
என்.டி. ஏ பா.ஜ.க கூட்டணியில் த.மா.கா சார்பில் பி.விஜயகுமார்
நாம் தமிழர் கட்சி - மு. கார்மேகன்
ஜுன் 4: வாக்கு எண்ணிக்கை அப்டேட்ஸ்
ஏப்ரல் 19-ம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இம்முறை இங்கு திமுக-அதிமுக இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரச்சாரத்தின் போது களத்திலும் இது வெளிப்பட்டது. கடந்த முறை மதிமுக இங்கு போட்டியிட்ட நிலையில் இம்முறை திமுக இங்கு நேரடியாக களம் கண்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில் மஞ்சள் மாநகர் இம்முறை யாருக்கு என்று பார்ப்போம்.
ஈரோடு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுகவின் கே.இ. பிரகாஷ் முன்னிலை பெற்று வருகிறார்.
மதியம் 2 மணி நிலவரப்படி திமுக 68,639 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது. திமுக கே.இ.பிரகாஷ்- 1,68,360 வாக்குகளும், அதிமுகவின் ஆற்றல் அசோக்குமார் 99,721 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் 26,850 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாகா வேட்பாளர் விஜயகுமார் 23,317 வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தி.மு.க வேட்பாளர் கே.இ. பிரகாஷ் 4,93,581 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக - 2,85,887 வாக்குகள், நாதக- 73,683 வாக்குகள்,
பாஜக கூட்டணியில் தமாகா- 69,499 வாக்குகள் பெற்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.