ஈரோட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில், அமைச்சர் உதயநிதியை காண தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
Advertisment
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதன் ஒருபகுதியாக, ஈரோடு சோலாரில் உள்ள ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார்.
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ஈரோடு சோலார் ரவுன்டானா பகுதியில் இன்று திறந்து வைத்தோம்.
உதயநிதியின் வருகையை முன்னிட்டு அவரை காண அங்கு கட்சியினர் குவிந்தனர்.
ஆனால் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மற்ற நிர்வாகிகள் அமைச்சரின் பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சிக்கு பின்னர், மாநிங்களவை எம்.பி அந்தியூர் செல்வராஜ் அமைச்சரின் வாகனத்தில் ஏற முயன்ற போது அவரையும் காவலர்கள் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தந்தி டிவி வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“