ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து பிரச்சாரம் தொடங்கியது. இடைத்தேர்தலில் போட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, எவ்வளவு வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் என பேட்டி அளித்துள்ளார்.
அதன் பிறகு அவர்கூறுகையில் விவசாயிகளும் நெசவாளர்களும் வாழ்வாதாரத்தை இழக்க திராவிட ஆட்சி திமுக தான் காரணம். அரசியல் என்பது மக்களுக்காக செய்யும் சேவை என்று சீமான் என்னை வேட்பாளராக நிறுத்தி இருக்கின்றார் என்றார்.
திராவிட கட்சிகள் பதவியை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி வருவதால் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. மக்கள் எங்களுக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்ய தயாராகிவிட்டனர். இதுவரை இல்லாத மாற்றத்தை ஈரோடு பெற தயாராகிவிட்டது என்றார்.
இந்த தேர்தலில் திமுக அரசு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் எட்டு பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்து அராஜகம் செய்து வருகின்றனர். நாங்கள் சட்டத்தை மதித்து கட்டுப்பட்டு பிரச்சாரம் செய்வோம் இந்த மண்ணுக்கு தேவையான அனைத்தையும் சீமான் பேசி வாங்கி தருவார் என்று வேட்பாளர் சீதாலட்சுமி கூறினார்.
எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது 20 ஆம் தேதிக்குள் உறுதியாகும் அதனையும் எங்கள் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.