Advertisment

ஈரோடு மண்டல திமுக மாநாடு : பந்தல் நிறையக் கூட்டம், உற்சாகத்தில் ஸ்டாலின்

ஈரோடு மண்டல திமுக மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டு வந்திருக்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Erode DMK Conference, MK Stalin

Erode DMK Conference, MK Stalin

ஈரோடு மண்டல திமுக மாநாடு முதல் நாள் நிகழ்ச்சிகள் இங்கு தரப்படுகிறது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன் தினமே குடும்பத்தினருடன் ஈரோடு வந்தார்.

Advertisment

ஈரோடு மண்டல திமுக மாநாடு ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் மார்ச் 24, 25-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) நடக்கிறது. தமிழ்நாட்டில் இனி தேர்தல் சீஸன்! கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அடுத்தடுத்து அணிவகுக்க இருக்கின்றன. டிடிவி தினகரன் அணி மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை பொறுத்து, சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே வருவதற்கான வாய்ப்பு உண்டு.

ஈரோடு மண்டல திமுக மாநாடு இந்தப் பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது. மண்டல மாநாடு என அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டு வந்திருக்கிறார்கள். மாநாடு நடைபெறும் பெருந்துறை, விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

ஈரோடு மண்டல திமுக மாநாடு தொடர்பான LIVE UPDATES

இரவு 7.30 : முதல் நாள் நிகழ்ச்சி முழுவதும் மாநாடு பந்தல் நிறையும் அளவுக்கு தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால் ஸ்டாலின் உள்பட மாநாட்டுக் குழுவினருக்கு மகிழ்ச்சி!

இரவு 7.15 : விஜயா தாயன்பன், ரகுமான்கான் ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கியதைத் தொடர்ந்து கம்பம் செல்வேந்திரன் உரையாற்றினார்.

மாலை 6.45 : சேலம் சுஜாதா, புதுக்கோட்டை விஜயா, சபாபதி மோகன், அன்பில் மகேஷ் ஆகியோரைத் தொடர்ந்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

மாலை 5.55 : எம்.ஆர்.ஆர்.வாசு விக்ரம், தாமரை பாரதி, மனுஷ்யபுத்திரன் ஆகியோரை தொடர்ந்து தஞ்சை கூத்தரசன் பேசினார்.

மாலை 5.00 : திமுக மாநாட்டின் மாலை அமர்வு நடந்துகொண்டிருக்கிறது. ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மேடைக்கு வந்தார்.

பகல் 1.40 : திருச்சி சிவா, ‘இனி தளபதி ஸ்டாலின் இல்லை. முதல்வர் ஸ்டாலின் என தொண்டர்கள் அழைக்க வேண்டும்’ என்றார். இதைத் தொடர்ந்து காலை அமர்வு நிறைவு பெறுவதாக டி.கே.எஸ்.இளங்கோவன் அறிவித்தார்.

மாலை அமர்வு 3 மணிக்கு இசை நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகும். 3.30 மணி முதல் பல்வேறு தலைப்புகளில் நிர்வாகிகள் பேச இருக்கிறார்கள்.

பகல் 1.05 : பேச்சாளர் தமிழ்தாசன், நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோரைத் தொடர்ந்து திருச்சி சிவா எம்.பி. பேசினார்.

பகல் 12.18 : சுப்புலட்சுமியின் தலைமையுரைக்கு பிறகு, கொள்கைப் பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் பேசினார். அவரும் சுப்புலட்சுமி, ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் பெயர்களுக்கு பிறகு, உதயநிதி ஸ்டாலின் பெயரை மறக்காமல் கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதி முன்னின்று நடத்திய முந்தைய மாநாடுகளில் ஸ்டாலின் பெயரை ஒவ்வொருவரும் எந்த முக்கியத்துவத்துடன் உச்சரித்தார்களோ, அதே முக்கியத்துவம் உதயநிதிக்கு கொடுக்கப்படுவதை இந்த மாநாடு உணர்த்தியிருக்கிறது.

Erode DMK Conference, MK Stalin

திமுக மாநாட்டில் கூட்டம்...

பகல் 11.40 : மாநாட்டு மேடை எதிரே முன் வரிசையில் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், முன்னாள் அமைச்சர் சங்கரன்கோவில் தங்கவேலு ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர். தலைமையுரையாற்றிய சுப்புலட்சுமி, செயல் தலைவர் ஸ்டாலினை, ‘தம்பி ஸ்டாலின்’ என குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலினை, ‘எனது மாப்பிள்ளை உதயநிதி ஸ்டாலின்’ என சொன்னார்.

பகல் 11.37 : சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையுரையை ஆரம்பித்தார்.

காலை 11.20 : மாநாட்டு மேடையில் 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் அமர வைக்கப்பட்டனர்.

காலை 11.10 : கோவி செழியன் முதல் நபராக பேசினார். தலைவர்கள் பெயர்கள் வரிசையில், ‘செயல் தலைவரின் குருதி, எங்களின் உறுதி, உதயநிதி ஸ்டாலின் அவர்களே..’ என உதயநிதியையும் விழித்துப் பேசினார் அவர்.

காலை 11.05 : தொடர்ந்து டி.ஆர்.பாலு, கனிமொழி, முரசொலி செல்வம், எ.வ.வேலு, கே.என்.நேரு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், ரகுமான்கான், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், என்.கே.கே.பெரியசாமி ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

காலை 11.00 : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநாட்டு திறப்பாளர் திருச்சி சிவா, கொடியேற்றிய கோவி செழியன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு க.முத்துசாமி சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.

காலை 10.45 : மாநாட்டுத் தலைவராக திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை, வரவேற்புக் குழுத் தலைவர் முத்துசாமி முன்மொழிந்தார். அதை மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிந்து பேசினர்.

காலை 10.00 : கோவி செழியன் எம்.எல்.ஏ. கொடியேற்றி வைத்து மாநாடு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

Erode Region DMK Conference திமுக மாநாட்டுக்கு வந்த ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

காலை 8.45 : திமுக மாநாட்டையொட்டி #DMKMaanaadu2018 என்கிற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் திமுக.வினர் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.

காலை 8.30 : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவும், இன்று காலையும் மாநாட்டு திடலுக்கு வந்து நிர்வாகிகளுடன் அளவளாவினார்.

காலை 7.55 : மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து நேற்று மாலை விமானம் மூலமாக கோவை வந்தார். அங்கிருந்து காரில் ஈரோடு வந்தார். மாநாட்டு வளாகத்தில் திராவிட இயக்க புகைப்பட கண்காட்சியை துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று இரவு பார்வையிட்டனர். அவர்களை மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் க.முத்துசாமி அழைத்துச் சென்று காட்டினார்.

Erode Region DMK Conference திமுக மாநாடு, மகளிரணி விழிப்புணர்வு வாகனப் பேரணி

காலை 7.50 : ஈரோடு மண்டல திமுக மாநாடு 2-ம் நாள் நிகழ்ச்சிகள் நாளை (25-ம் தேதி) காலை 9:00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கும். காலை 10:00 மணி முதல் முக்கிய நிர்வாகிகள் உரையாற்றுகிறார்கள். 12:30 மணிக்கு திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம் நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு இசை நிகழ்ச்சி, மாலை 4:00 மணிக்கு மாநாட்டு தீர்மானம் வாசித்தல், மாலை 6:00 மணிக்கு மாநாட்டு நிறைவு நிகழ்ச்சி நடக்கிறது.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நாளை இரவு 8:00 மணிக்கு பேசுகிறார். இரவு 8:30 மணிக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார். இரு நாட்களிலும் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ரகுமான்கான் என முக்கிய நிர்வாகிகள் பேசுகின்றனர்.

காலை 7.45 : இன்று மதியம் 3:00 மணிக்கு இசை நிகழ்ச்சி, 4:00 மணிக்கு பல்வேறு முக்கிய நிர்வாகிகளின் பேச்சு, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியன இடம் பெறுகின்றன.

காலை 7.30 : இன்று (மார்ச் 24) காலை 9:00 மணிக்கு மாநாட்டின் தொடக்கமாக அரித்துவாரமங்கலம் பழனிவேல் நாதஸ்வரம், காலை 10:00 மணிக்கு கோவி.செழியன் மூலமாக மாநாடு திடலில் கட்சிக் கொடியேற்றம், தொடர்ந்து ஈரோடு மண்டல திமுக மாநாடு வரவேற்புக்குழு தலைவரும், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளருமான முத்துசாமி காலை 10:30 மணிக்கு வரவேற்று பேசுகிறார். மாநாட்டு தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பேசுகின்றனர்.

 

Mk Stalin Erode District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment