ஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்... 'GI' டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

சின்ன நாடான், பெரிய நாடான் என்ற இரண்டு வகைகளில் ஈரோடு பகுதியில் சின்ன நாடான் விளைகிறது. 

Erode turmeric receives Geographical Indication tag : ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை வாய்ந்து விளங்கும். உலகின் பல்வேறு பகுதிகளில் அதற்கான மாற்றுருவாக்கம் இருந்தாலும் உண்மையான பொருளுக்கு இருக்கும் தனித்துவம் தான் அனைவராலும் போற்றப்படும் ஒன்றாகும்.

காஞ்சிப் பட்டு, ஆரணிப்பட்டு, கோவை கோரா காட்டன், திருநெல்வேலி அல்வா, மதுரை மல்லிகை, திண்டுக்கல் பூட்டு, சிறுமலை வாழை – இதையெல்லாம் அந்தந்த ஊர்களில் வாங்கினால் தான் அதன் மதிப்பு கூடுதலாக இருக்கும்.

Erode turmeric receives Geographical Indication tag

இப்படி ஒவ்வொரு இடம் சார்ந்த ஒவ்வொரு பொருளுக்கும் புவியியல் சார்ந்த குறியீடு வழங்குவது வழக்கம். அது அந்த ஊர் விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், பண்டைய காலம் தொட்டே செய்யப்பட்டு வரும் தொழில்களுக்கும் அதன் விளைபொருட்களுக்கும் புவியியல் சார்ந்த குறியீடுகள் வழங்கப்படுவதால் அப்பகுதி மக்கள் பல்வேறு நன்மைகளை அடைவார்கள்.

இப்படியாக ஈரோடு மஞ்சளுக்கும் ஜி.ஐ. டேக் வழங்க வேண்டுமென ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் 2013ம் ஆண்டு விண்ணப்பம் வழங்கியது. அந்த விண்ணப்பம் வரவேற்கப்பட்டு, அதனை பொது கவனத்திற்கு 2018ம் ஆண்டு கொண்டு வந்தது ஜி.ஐ. அமைப்பு.

ஜி.ஐ. டேக் வழங்குவதன் மூலம் அந்த மூலப் பொருட்களை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தவோ, ஈரோடு மஞ்சள் என்ற பெயரை பயன்படுத்தி வேறொரு இடத்தில் விற்பனை செய்யவோ இயலாது.

ஈரோடு மற்றும் கோவையின் எல்லைப் பகுதியில் விளையும் மஞ்சளுக்கு இந்த ஜி.ஐ. டேக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொடுமுடி, சிவகிரி, ஹவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சென்னாம்பட்டி, சத்தியமங்கலம், தலவாடி ஆகிய பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு இந்த ஜி.ஐ. டேக் வழங்கப்பட்டுள்ளது.

சேர, சோழ, பாண்டியன் காலத்தில் இருந்தே மஞ்சள் வெளிநாடுகளுக்கும் இன்னபிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததிற்கான சான்றுகள் கிடைத்தன.  மஞ்சளில் இரண்டு வகைகள் உண்டு. சின்ன நாடான், பெரிய நாடான் என்ற இரண்டு வகைகளில் ஈரோடு பகுதியில் சின்ன நாடான் விளைகிறது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close