ஈரோடு (கிழக்கு)- 98 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிவபிரசாத் போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். இதை தொடர்ந்து, அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார். இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாத் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேலு தலைமையில் 293 கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களையும் டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார்.