பதுங்கிய பா.ஜ.க; பங்காளிச் சண்டையில் அ.தி.மு.க; ஈரோட்டில் எதிரிகளை தேடும் தி.மு.க - Erodi East By-Polls AIADMK OPS EPS BJP DMK in field | Indian Express Tamil

பதுங்கிய பா.ஜ.க; பங்காளிச் சண்டையில் அ.தி.மு.க; ஈரோட்டில் எதிரிகளை தேடும் தி.மு.க!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் பா.ஜ.க பதுங்க, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பங்காளிச் சண்டையில் அ.தி.மு.க மூழ்கிக் கிடக்க எதிரிகளே இல்லாமல் தி.மு.க கூட்டணி ஈரோடு தேர்தலை எதிர்கொள்கிறது. இன்னும் சரியாக சொல்வதென்றால், தி.மு.க ஈரோட்டில் எதிரிகளைத் தேடுகிறது.

Erodi East By-Polls, No opposition to DMK, AIADMK, OPS, EPS, BJP, பதுங்கிய பா.ஜ.க; பங்காளிச் சண்டையில் அ.தி.மு.க, ஈரோட்டில் எதிரிகளை தேடும் தி.மு.க, Erodi East By-election, congress, annamalai evks elangovan, dmk, mk stalin

தமிழக அரசியலில் ஆளும் தி.மு.க-வுக்கு முதல் எதிர்க்கட்சி அ.தி.மு.க-வைத் தாண்டி பா.ஜ.க-தான் முதன்மை எதிர்க்கட்சியாக தி.மு.க எதிர்ப்பு மூலம் முன்னிறுத்திக் கொண்டது. இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பா.ஜ.க போட்டியிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, போட்டியிடாமல், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பங்காளிச் சண்டையில் மூழ்கியிருக்கும் கூட்டணி கட்சியான அதி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவுத்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் பா.ஜ.க பதுங்க, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பங்காளிச் சண்டையில் அ.தி.மு.க மூழ்கிக் கிடக்க எதிரிகளே இல்லாமல் தி.மு.க கூட்டணி ஈரோடு தேர்தலை எதிர்கொள்கிறது. இன்னும் சரியாக சொல்வதென்றால், தி.மு.க ஈரோட்டில் எதிரிகளைத் தேடிக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

அதே நேரத்தில், சட்டமன்ற இடைத்தேர்தல்கள் ஆளும் கட்சியின் அரசின் சாதனைகளை அளவிடுவதற்கான தேர்தலாகப் பார்க்கப்படுவதில்லை. அதே போல, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேறுபட்ட ஒன்றும் அல்ல.

2021 சட்டமன்றத் தேர்தலின்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் எதிர்த்துப் போட்டியிட்டன. இதில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட பெரியாரின் கொள்ளுப் பேரனும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் ஈ.வே.ரா கிட்டத்தட்ட 9000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா காலமானதைத் தொடர்ந்து, இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இது காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல, தி.மு.க அமைச்சர்கள் குழுவுடன் பலமாக களம் இறங்கியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் என்றாலும் இது தி.மு.க அமைச்சர்கள் முழு மூச்சில் செயல்பட்டு வருகிறார்கள்.

தி.முக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், மின்கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை, மூத்த அமைச்சர்களின் தவறான நடத்தை என சமீபகாலமாக தி.மு.க மீது பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

இதனால், ஆளும் தி.மு.க-வை இந்த இடைத் தேர்தலில் வீழ்த்தி எதிர்க்கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் மாநிலத்திலும் ஆளும் தி.மு.க-வுக்கு பிரதான எதிர்க்கட்சி என்றால் அது அதி.மு.க-தான். ஆனால், கூட்டணி கட்சியான பா.ஜ.க ஆளும் தி.மு.க-வை சிந்தாந்த ரீதியாக கடுமையாக எதிர்த்து தன்னை முதன்மை எதிர்க்கட்சியாக முன்னிறுத்திக் கொண்டது.

இதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசை எதிர்த்து பா.ஜ.க போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டது. ஆனால், பா.ஜ.க போட்டியிடாமல் பதுங்கியது.

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வோ துரதிருஷ்டவசமாக, இரண்டு முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான பங்காளிச் சண்டையில் மூழ்கி இருக்கிறது. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பு தனித் தனியாக வேட்பாளர்களை அறிவித்தாலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அ.தி.மு.க பொதுக்குழு முடிவு செய்துள்ளது. ஓ.பி.எஸ் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார். அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இ.பி.எஸ் வேட்பாளராக அறிவித்த தென்னரசுவை ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளதாக தேதல் ஆணையத்திடம் ஒப்படைத்தார். இதன் மூலம் தென்னரசு அ.தி.மு.க-வின் வேட்பாளர் என்பது முடிவாகி உள்ளது.

தி.மு.க கூட்டணி எந்த தடையும் இல்லாமல் காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தில் களத்தில் முன்னே சென்று கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-விலோ ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பங்காளி சண்டையில் மூழ்கிக் கிடக்கிறது.

இருப்பினும், இ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு அ.தி.மு.க-வின் வேட்பாளராக உறுதியாகி உள்ளதால், இ.பி.எஸ் ஓ.பி.எஸ்-ஸை விட வலுவான நிலையில் இருக்கிறார். தி.மு.கவை தீவிரமாக எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியாக காட்சிக்கொண்ட பா.ஜ.க, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் தவித்து, அ.தி.மு.க ஒன்றுபட்டிருக்க வேண்டும். அ.தி.மு.க-வுக்கு ஆதரவு என்று கூறியது. இதன் மூலம், இந்த இடைத் தேர்தலில் பா.ஜ.க-வும் பின் வாங்கியது.

ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்து இந்த ஒன்றரை ஆண்டுகளில், மின்கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை, மூத்த அமைச்சர்களின் தவறான நடத்தை என விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தி.மு.க-வை இந்த இடைத் தேர்தலில் வீழ்த்த எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன. பா.ஜ.க போட்டியிடாமல் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்தது. அ.தி.மு.க-வோ பங்காளிச் சண்டையில் மூழ்கியுள்ள்து. இதனால், தி.மு.க ஈரோடு இடைத் தேர்தலில் எதிரிகளே இல்லாமல் களம் காண்கிறது. உண்மையில் தி.மு.க எதிரிகளைத் தேடுகிறது என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Erodi east by polls no opposition to dmk and aiadmk ops eps bjp