Advertisment

காவிரி கூக்குரல் இயக்கம் மீதான குற்றச்சாட்டு - ஈஷா பவுண்டேஷன்

cauvery calling: மரம் நடுதலை விட, தேவையில்லாத இடத்தில் மரம் நடாமல்  இருப்பது அதை விட முக்கியமாகும். உதரணமாக புல்வெளிகள் மற்றும் நதிநீர் சமவெளிகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cauvery Calling, Leonardo DiCaprio, Isha Foundation, Sadhguru Jaggi Vasudev

Cauvery Calling, Leonardo DiCaprio, Isha Foundation, Sadhguru Jaggi Vasudev, லியனார்டோ டிகேப்ரியோ, டைட்டானிக், ஹாலிவுட், ஈஷா பவுண்டேசன், ஜக்கி வாசுதேவ், காவிரி கூக்குரல்

காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தின் மூலம் காவிரி பாயும் பகுதிகளில் 242 கோடி மரங்கள் நடப்படம் என்று ஈஷா பவுண்டேஷன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அறிவித்து இருந்தார். ஜக்கி வாசுதேவின் காவிரி கூக்குரல்  இயக்கத்துக்கு, ஹாலிவுட் முன்னணி திரைநட்சத்திரம் கன் லியானார்டோ டிகேப்ரியோவும்  பேஸ்புக் பதிவு மூலம் தனது ஆதரவைப் பதிவு செய்திருந்தார்.

Advertisment

காவிரி கூக்குரலுக்குக் கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று  என்விரான்மென்ட் சப்போர்ட் குரூப்(ESG) என்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்று டிகேப்ரியோ விற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இந்த கடிதத்துக்கு  நாடு முழுவதும் உள்ள 95 க்கும் மேற்பட்ட சுற்று சூழல் அமைப்புகள் தங்களது ஆதரவையும் தெரிவித்திருந்தன.

அந்தக் கடிதத்தில் உள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:

காவிரி நதி நீர் காப்பாற்றப் பட வேண்டியது தான். இதைப் பற்றி நீங்கள் பேசியதை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால், வெறும் மரம் நடுவதால் ஒரு நதியையும் அதன் இயல்பையும் காப்பாற்ற முடியும் என்பது மிகவும் தவறனா சிந்தனையாகும். எப்போதும்  தேவைகளுக்கு ஏற்ப, உள்ளூர் நிலத் தன்மைகளைப் புரிந்து, மன்வளத்திற்கேற்ப மரம் நடுதல்  முயற்சியை மேற்கொள்ள வேண்டும். மரம் நடுதலை விட, தேவையில்லாத இடத்தில் மரம் நடாமல்  இருப்பது மிகவும் முக்கியமானதாகும். உதரணமாக, புல்வெளிகள் மற்றும் நதிநீர் சமவெளிகளில் மரம் நட்டால்  நீரோடைகள் வறண்டு போவதற்கும், வனவிலங்குகளின் வாழ்விடங்களை அழிப்பதற்கும் காரணமாய் அமைந்துவிடும். மேலும், நடப்படும் அனைத்து மரங்களும் ஒரே வகையாக இருப்பதால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும்.

அரசியலமைப்பு ரீதியாக அதிகாரம் பெற்ற பஞ்சாயத்துகள் மற்றும் சட்டரீதியான வன உரிமைகள் குழுக்கள், பல்லுயிர் மேலாண்மை குழுக்கள், வார்டு குழுக்கள் போன்றவற்றை அதிகாரப்படுத்தி, அவர்கள் வாயிலாகவே சுற்றுச் சூழலை பாதுக்காக்க வேண்டும் இந்தியச் சட்டதிட்டங்களை சிறிதும் மதிக்காமல் யானைகள் நடைபாதையிலும், ஆதிவாசிகளின் நிலத்தை அபகரித்தும்  தனது ஈஷா பவுண்டேஷனை நடத்தும்  ஜக்கி வாசுதேவிடம் உண்மையிலான சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்புணர்வு திட்டம் எந்த அளவுக்கு பயன் தரும் ? என்பதால் நீங்கள் கொடுத்த ஆதரவைத் திரும்ப பெறுங்கள் என்று டிகேப்ரியோவிற்கு கடிதம் எழுதியிருந்தனர்.

ஈஷா பவுண்டேஷனின் பதில் : 

இந்த கடிதத்திற்கு தற்போது ஈஷா பவுண்டேஷன் தனது மறுப்பைத் தெரிவித்துளது. இது விளம்பரத்திற்காக எழுதப்பட்டக் கடிதம். இந்த திட்டத்தை பல ஐஏஎஸ் அதிகாரிகள் முதற் கொண்டு மத்திய அமைச்சர்கள் வரை ஆதரித்து வருகின்றனர்.

கடித்ததில் உள்ளது போல், நாங்கள் ஒரே வகையான மரங்களை நடவில்லை. கர்நாடக வனத்துறை, வேளாண் விவசாயிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நிறுவனம், வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் கலந்து ஆலோசித்து எந்தெந்த இடங்களில் என்னென்ன மரங்களை நடவேண்டும் என்ற தெளிவான சிந்தனையோடு தான் திட்டம் போடப்பட்டுள்ளது. மேலும், காவிரி கூக்குரல் திட்டம் அரசாங்க நிலங்களையோ, புல்வெளி மற்றும் நதிநீர் சமவெளிகளிலோ செயல்படுத்த படாது. விவசாயிகள் நிலங்களில் அவர்களின் ஒப்புதலோடு மட்டும் மரம் நடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.  மேலும்,  நடுவண் அரசு சுற்றுச்சூழல் அமைச்சகம்,  தமிழ்நாடு மாநில வனத்துறை ஈஷா பவுண்டேஷன் எழுப்பபட்டிருக்கும்  நிலம் யானை நடைபாதை  இல்லை என்று ஏற்கனவே திட்டவட்டமாகக் கூறி விட்டனர் என்று தனது பதில் கருத்தை தெரிவித்துள்ளது ஈஷா பவுண்டேஷன்.

Cauvery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment