சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சத்யராஜ் நேற்று (நவ.8) கலந்து கொண்டு பேசினார். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என பிரபாகரனே கூறியுள்ளார் என நடிகர் சத்யராஜ் பேசினார். அவர் பேசுகையில்,"ஒரு முறை பேரறிவாளன் ஜாமீனில் வெளியில் வந்திருந்தார். அவரை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் வீட்டுக் கதவை திறந்த உடன் அங்கு சுவரில் பெரியார், பிரபாகரன் படம் இருந்தது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. விடுதலை ராஜேந்திரன் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில், 1975-ல் கியூபாவில் உலகப் பேராளிகள் மாநாடு நடந்துள்ளது. இதற்கு பிரபாகரன் அழைக்கப்பட்டிருந்தார். அவர் சூழ்நிலைகள் காரணமாக செல்ல வில்லை. இதற்கு பதில் அவர் கியூபாவிற்கு கடிதம் அனுப்புகிறார்.
அதில், தமிழ் இந்தியாவிலேயே பழமையான மொழி என்றும் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்னும் வகையில் அவர் பேசியுள்ளார். தமிழ் மொழி பேசுகிற திராவிடர்கள் ஆகிய நாங்கள் என்று பிரபாகரன் பேசியுள்ளார். தமிழ், தமிழ் தேசியத்தின் அரண் திராவிட இயங்கங்கள்" என்று சத்யராஜ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“