Advertisment

யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

திருச்சியில் போலி ஆவணங்கள் கொண்டு குவாரி நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணையில், சட்டத்திற்கு எதிராக செயல்படுவோர் மீதான நடவடிக்கை வலிமையானதாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

லால்குடியில் இயங்கி வரும் கிராவல் குவாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி லால்குடியைச் சேர்ந்த மங்கலம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.டி.ஓ மூலம் கிராவல் குவாரிக்கு ரூ.3 கோடியே 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

மேலும் அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி போலி ஆவணங்கள் கொண்டு குவாரி நடத்திய ராஜா என்பவர் உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "சட்டத்திற்கு எதிராக செயல்படுவோர் மீதான நடவடிக்கை வலிமையானதாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அரசுத் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றும் இழப்பீடு கோரி மனுதாரர் உரிய சிவீல் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டார். 

மதுரைக் கிளையில் செயல்பட்டு வரும் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தற்போது மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஜனவரி முதல் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக அமைச்சர் கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோரை சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது தொடர்பான உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தார். 

இதில், அமைச்சர் பொன்முடி வழக்கில் அவரும், அவரது மனைவியும் குற்றவாளி எனக் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியை இழந்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment