scorecardresearch

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

EVKS Elangovan hospitalized due to Heart attack
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நெஞ்சுவலி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் அவரது உடல் நிலை குறித்து அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் மட்டும் வெளியாகிவுள்ளது.

அண்மையில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தார்.

கடந்த வாரம்தான் எம்.எல்.ஏ.வாக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Evks elangovan hospitalized due to heart attack