EVKS Elangovan medical updates Tamil News: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற (எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.) ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது.
மருத்துவர் பேட்டி
இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது போரூர் மருத்துவமனை மருத்துவர் பேசுகையில், ‘ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமாக உள்ளார். இன்னும் ஓரிரு நாளில் அவர் வீட்டிற்கு திரும்பலாம். அமைச்சர் மா.சுப்பிரமணியனும் அவரை பார்த்தார்.
அவருக்கு இருமல் கொஞ்சம் அதிகமாக உள்ளது. டெல்லி சென்றதால் அவருக்கு அந்த தொற்று வந்திருக்கலாம். அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை அங்கு இருப்பார். நாளை அவரது அறைக்கு செல்வார். இரண்டு மூன்று நாட்களில் அவர் வீடு திரும்பலாம். அவரது பாதுகாப்புக்காகவும், மதிப்பீடு செய்வதற்கும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.” என்று அவர் கூறியுள்ளார்.
Former Union Minister #EVKSElangovan Health Update: According to the bulletin issued by hospital, the Erode East MLA was admitted with mild chest infection on Wednesday. "His vitals are stable, he is recovering well," the bulletin noted. @IndianExpress pic.twitter.com/yuz1jd7Nt6
— Janardhan Koushik (@koushiktweets) March 16, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil