காங்கிரஸ் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு மார்ச் 15ஆம் தேதி திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில் அவருக்கு லேசான கொரொனா பெருந்தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அவருக்கு எக்ஸ்.பி.பி. வகை கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ஆக பதவியேற்ற ஒரே வாரத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இது அவரது ஆதரவாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சமீபத்திய சோதனையில் கொரோனா இல்லை என முடிவுகள் வந்துள்ளது. இதன் மூலம் அவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மேலும் இதய பாதிப்பு சிக்கலில் இருந்து மீண்டு வருவதாகவும், தற்போது அவர் ஐ.சி.யூ.,வில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/