காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.எல்.வு.மான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களை சநதித்தார்.
அப்போது, “நடிகை குஷ்பு பிச்சையெடுப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்” என அவரை விமர்சித்தார். தொடர்ந்து, “பிரதமர் மோடி முடிந்தால் தமிழ்நாட்டில் நின்று டெபாசிட் வாங்கினால், நான் அவரை பிரமராக ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, “காங்கிரஸ் இரண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாள்களில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் அர்த்தம் இல்லை. மோடி சொல்வதில் அர்த்தம் இல்லை. மோடியை பற்றி சொல்வதிலும் அர்த்தம் இல்லை. அவரின் மொத்த உருவரும் ஒரு புரட்டுதான்.
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் மு.க. ஸ்டாலின் எவ்வளவோ நல்ல திட்டங்களை செய்துள்ளார். ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை ஜெயலலிதாதான் செய்தார்.
போதைப் பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் இப்போது வெளிவருகிறது. ஆனால் இந்தப் போதைப் பொருள்கள் பெரும்பாலும் குஜராத்தில், அதுவும் அதானி துறைமுகத்தில் இருந்துதான் வருகிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“