காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கடந்த 15ஆம் தேதி திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் அவருக்கு தற்போது கொரோனா பெருந்தொற்று பாதிப்ப இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 15ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடல் நிலை சீராக உள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தார்.
கடந்த வாரம்தான் எம்.எல்.ஏ.வாக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/