Advertisment

நில அபகரிப்பு புகார்… அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் புத்திச்சந்திரன் மீது வழக்குப்பதிவு

நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் வசிக்கும் ஒருவர் தனது தேயிலைத் தோட்டத்தை அபகரிக்க முயன்றதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் புத்திச்சந்திரன் மீது மிரட்டல் அத்துமீறல் குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Dec 29, 2022 21:55 IST
Buddhichandran, Ex AIADMK Minister Buddhichandran, Ex AIADMK Minister Buddhichandran booked, Ex AIADMK Minister Buddhichandran, Nilgiri, Land grabing minister, நீலகிரியில் நில அபகரிப்பு புகார்... அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திச்சந்திரன் மீது வழக்குப்பதிவு

நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் வசிக்கும் ஒருவர் தனது தேயிலைத் தோட்டத்தை அபகரிக்க முயன்றதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் புத்திச்சந்திரன் மீது மிரட்டல் அத்துமீறல் குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

நீலகிரி மாவட்டம், அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர் புத்திச்சந்திரன் தனது தேயிலை தோட்டத்தை அபகரிக்க முயன்றதாக மஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, புத்திச்சந்திரன் மீது கிரிமினல் மிரட்டல் மற்றும் தனியார் சொத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

நீலகிரி சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் கணக்காளர் எஸ்.ராஜூ அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: அவர் தனக்குச் சொந்தமாக 15.82 சென்ட் தேயிலைத் தோட்டம் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு அக்டோபரில், மஞ்சூரைச் சேர்ந்த டி. பீமன் என்பவர் புத்திச்சந்திரன், ராஜுவின் தேயிலை தோட்டத்தை வாங்கி தொழிற்சாலை திறக்க விரும்புவதாகக் கூறினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறியுள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு பீமன் மீண்டும் எஸ். ராஜுவை அணுகி, முன்னாள் அமைச்சர் மண் அள்ளும் இயந்திரத்தைப் பயன்படுத்தி அவருடைய தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகளை அகற்றுவார் என்று கூறியதாக புகாரில் க்கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, புத்திச்சந்திரன், தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளர் ராஜுவை அழைத்து அவருடைய தேயிலைத் தோட்டத்தை தனக்கு விற்கும்படி கேட்டுள்ளார்.

ராஜு டிசம்பர் 18-ம் தேதி மஞ்சூர் காவல்துறையை அணுகியதை அடுத்து, போலீஸார் ராஜு மற்றும் புத்திச்சந்திரன் இருவரையும் விசாரணைக்கு அழைத்தனர். சில நாட்களுக்குப் பிறகு, ராஜுவுக்கு அவரது நிலமும் தேயிலை செடிகளும் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும், டிசம்பர் 21-ம் தேதி ராஜூவின் தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகளை வேரோடு பிடுங்குவதற்கு மண் அள்ளும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளர் ராஜு அளித்த புகாரின் பேரில், போலீஸார் புத்திச்சந்திரன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 427 (சொத்துக்கு சேதம் விளவித்தல்), 447 (கிரிமினல் அத்துமீறல்) மற்றும் 506 (ஐ) (கிரிமினல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

#Nilgiris #Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment