scorecardresearch

ஜெயலலிதா நினைவுகள்: தமிழக அரசியலை திசை மாற்றிய அந்த ஒரு போட்டோ!

மறைந்த ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தையே ஒரு புகைப்படம் மாற்றியுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸின் முன்னாள் புகைப்படக் கலைஞர்தான் அந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

ஜெயலலிதா நினைவுகள்: தமிழக அரசியலை திசை மாற்றிய அந்த ஒரு போட்டோ!

மறைந்த ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தையே ஒரு புகைப்படம் மாற்றியுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸின் முன்னாள் புகைப்படக் கலைஞர்தான் அந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

1989-ம் ஆண்டு மார்ச் 25 தமிழக அரசியலில் ஒரு முக்கியமான நாள். மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது. அவர் பட்ஜெட் அறிக்கையை வாசித்து கொண்டிருந்தார். எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா தொடர்நது அவரை வாசிக்கவிடாமல், எதிர்த்து பேசினார். இதற்கு கருணாநிதி பதில் சொன்னார்.

கூட்டத்  தொடர் முடிந்தபோது, ஜெயலலிதாவின் சேலையை துரைமுருகன் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. கலைந்த தலையுடன் வெளியேறிய, அவரை அதிமுக தலைவர்கள் பாதுகாக்க சூழந்து கொண்டனர். இந்நிலையில் இந்த புகைப்படத்தை இந்தியன் எக்ஸ்பிரஸின் முன்னாள் புகைப்பட கலைஞர் சிவராமன் எடுத்துள்ளார். அது ஒரு கருப்பு வெள்ளைப் புகைப்படம். அந்த படத்தில் கலைந்த தலையுடன் அதிமுக உறுப்பினர்கள் சூழ ஜெயலலிதா இருப்பார்.

இந்த புகைப்படம் மக்களின் மனதை மாற்றியது. ஒரு பெண்ணாக ஜெயலலிதா அவமதிக்கப்பட்டது தமிழக மக்களை காயப்படுத்தியது. இதனால் அவர் 1991ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் ஜெயலலிதா. 234 தொகுதிகளில் 225 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது.

ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில், அவர் பெண் என்பதால் பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளார். மேலும் அவர் பெண்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். இந்நிலையில் ஒரு முறை ”மாயாவதி பாலியல் தொழில் செய்யபவர்களை விட மோசமானவர்” என்று  பாஜக தலைவர் தயா சங்கர் சிங்  தெரிவித்தார். இதற்கு உடடியாக ஜெயலலிதா மறுத்து தெரிவித்தார். ” பெண் அரசியல் வாதிகளை தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதை அனைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும். நானும் இதுபோன்ற அனுபவங்களை கடந்து வந்துள்ளேன்” என்று கூறினார்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ex express photographer recounts how his iconic photograph helped jayalalithaa