விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடந்த 3 ஆண்டுகளில் சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக சி.வி. சண்முகம் தெரிவித்திருந்தார். இது குறித்து உரிய புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாக, பல்வேறு காவல் நிலையங்களில் 21 புகார்கள் அளித்த நிலையிலும், அது குறித்து தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சி.வி. சண்முகம் இன்று சென்றிருந்தார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியே சென்று இருப்பதாக அவரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு, தான் வருவது தெரிந்து கொண்டு வேண்டுமென்றே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியே சென்றதாக குற்றஞாட்டிய சி.வி. சண்முகம், காவல் கண்காணிப்பாளரை சந்திக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறினார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், போராட்டத்தைக் கைவிட மறுத்ததால், போலீசார் அவரை கைது செய்தனர்.
திடீர் போராட்டத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“