Advertisment

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சரின் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை - ஐகோர்ட் தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளர் வெங்கட கிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சரின் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை - ஐகோர்ட் தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளர் வெங்கட கிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், வெங்கடகிருஷ்ணன் மனைவி மஞ்சுளாவுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

Advertisment

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி 1991 -96-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்தபோது, இவரது நேர்முக உதவியாளராக பணியாற்றியவர் வெங்கடகிருஷ்ணன். இவர் இந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக  73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து, 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், வெங்கடகிருஷ்ணனும், மஞ்சுளாவும் வருமானத்துக்கு அதிகமாக 700 சதவீதம் சொத்துக்கள் சேர்த்துள்ளது நிரூபணமாகி உள்ளதாக கூறி, இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில், தண்டனை விவரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா இருவரையும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். 
அதன்படி, வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவரிடமும், தண்டனை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பிய போது, குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என கோரினர். மேலும், இந்த வழக்கால் 27 ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்ததாகவும், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதால், கீழமை நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் வழங்க வேண்டும் என இருவர் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, வெங்கடகிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மஞ்சுளாவுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 
மேலும், கீழமை நீதிமன்றத்தில் சரணடைய அக்டோபர் 25-ம் தேதி வரை அவகாசம் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment