/tamil-ie/media/media_files/uploads/2020/07/ajith-news-reactions-2.jpg)
ex mla sunderrajan death : தேமுதிக-வின் முன்னாள் எம்.எல்.ஏவும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான ஆர். சுந்தர் ராஜன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவு கேப்டனை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் சுந்தர் ராஜன். 2011-ல் மதுரை மத்திய தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக தேர்வானார்.அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுந்தர் ராஜன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் தேமுதிக-யில் கட்சியின் பொருளாளராகவும் சுந்தர் ராஜன் பதவி வகித்தார். பின்பு,அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. ஆக மாறி அக்கட்சியில் இணைந்தார். 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க, சீட் கிடைக்கவில்லை.
அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம்! யாருக்கெல்லாம் பாசிடிவ் ? நெகடிவ்?
இவரது இறப்பு செய்தி தேமுதிக நிர்வாகிகள் மற்றும் அதிமுக கட்சி தலைவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுந்தர் ராஜன் இறப்பு குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.R.சுந்தர்ராஜன் அவர்கள் இன்று உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 7, 2020
அதில்,” திரு.R.சுந்தர்ராஜன் காலமான செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். மேலும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.”
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.