காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரத்தில் 11ஆம் வகுப்பு தேர்வின் போது மாற்றுத்திறனாளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
மூவரசவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பாலுசெட்டி சத்திரத்தில் உள்ள திருப்புட்குழி அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மையத்தில் தனது நிலுவைத் தாளை எழுதினார்.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 17,705 மெகாவாட் மின் தேவை பதிவு
அப்போது, மாணவிக்கு தேர்வு எழுத உதவியாளராக நியமிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகநாதன், அவருக்கு உதவுவதாக கூறி, அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து, முதற்கட்ட விசாரணைக்கு பிறகு ஜெகநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil