scorecardresearch

மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை; தேர்வு எழுத உதவிக்கு வந்த ஆசிரியர் கைது

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட தேர்வுக்கூட கண்காணிப்பாளர் போக்சோ சட்டத்தில் கைது

மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை; தேர்வு எழுத உதவிக்கு வந்த ஆசிரியர் கைது

காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரத்தில் 11ஆம் வகுப்பு தேர்வின் போது மாற்றுத்திறனாளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

மூவரசவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பாலுசெட்டி சத்திரத்தில் உள்ள திருப்புட்குழி ​​அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மையத்தில் தனது நிலுவைத் தாளை எழுதினார்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 17,705 மெகாவாட் மின் தேவை பதிவு

அப்போது, மாணவிக்கு தேர்வு எழுத உதவியாளராக நியமிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகநாதன், அவருக்கு உதவுவதாக கூறி, அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து, முதற்கட்ட விசாரணைக்கு பிறகு ஜெகநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Exam invigilator arrested for misbehaving disabled student in kancheepuram