scorecardresearch

கேம்பஸ் இன்டர்வியூ.. நீதிபதிகள் வேதனை.. அதிரடி உத்தரவு

கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் நிறுவனங்களின் 3 ஆண்டு பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி தர வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Madurai High Court Branch Judges have said that they should examine the 3-year background of the companies conducting campus interviews
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிய்ர்கள் படிப்பை முடித்த பிறகு அவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இதில் சில முறைகேடுகள் நடைபெறுகின்றன. மாணவர்களுக்கு ஒழுங்கான வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அதன்படி, “கேம்பஸ் இண்டர்வியூவில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் நிறுவனங்களின் 3 ஆண்டு பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி தர வேண்டும். மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Examine the 3 year background of the companies conducting campus interviews