5 மாநிலத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்றும் தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் ஆட்சியை வெளியேற்றி ஆதிக்கம் செலுத்தும் என்றும் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும், தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ் ஆட்சியை அகற்றலாம் என்றும் முக்கிய தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் வியாழக்கிழமை ஒளிபரப்பிய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் இந்தி பேசும் மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் முடிவுகள் குறித்து கருத்துக் கணிப்புகள் மாறுபட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் தொங்கு சட்டசபைக்கு வழிவகுக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2014-ல் தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து ஆட்சியில் இருக்கும் கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக, அனைத்து கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் இடங்களின் அளவுகோலி மட்டுமே வேறுபடுகின்றன. இந்த கருத்துக் கணிப்புகள் உண்மையாகிவிட்டால், மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக, தென்னிந்தியாவில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய மன உறுதியை அளிக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸ் கர்நாடகாவில் பா.ஜ.க-வை ஆட்சியில் இருந்து அக்கட்சி அகற்றியது.
பெரும்பாலும் அனைத்து கருத்துக்கணிப்புகளும் சத்தீஸ்கரில் காங்கிரஸுக்கு தெளிவான வெற்றியைக் கணித்துள்ளன. 2018-ல் 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களை வென்றிருந்தாலும், அக்கட்சி சத்தீஸ்கரில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த முறை சத்தீஸ்கரில் காங்கிரஸ் குறைவான இடங்களைப் பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“