முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ₹404 கோடியில் விரிவாக்கம் செய்வதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும், அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
இத்திட்டமானது கடந்த ஆண்டு முதல், பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளையொட்டி நடைமுறைக்கு வந்தது. தற்போது, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ₹404 கோடியில் விரிவாக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil