Advertisment

என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

படுகாயம் அடைந்த 17 நபர்களையும் உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

NLC accident death toll rises to 7 : நெய்வேலி என்.எல்.சியில் உள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று பகல் 12:00 மணி நேர நிலவரப்படி நெய்வேலியில் அமைந்திருக்கும் அனல் மின் நிலையத்தின் பாய்லர் வெடித்ததில் 7 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

Explosion at a boiler in stage -2 of the NLC plant death toll rises to 5 என்.எல்.சி பாய்லர் வெடிப்பு

விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட 11 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 2 நபர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. படுகாயம் அடைந்த 17 நபர்களையும் உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க : டயாலிசிஸ் வரை செல்லும் போலீசின் கொடூர தாக்குதல்கள் – தமிழக போலீஸ் ஸ்டேசன்கள் மீது குவியும் வழக்குகள்

இந்த வருடத்தில் இது இரண்டாவது முறையாக பாய்லர் வெடித்து சிதறும் நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இது போன்று ஏற்கனவே மே 7ம் தேதி, இதே நிலையத்தில் பாய்லர் வெடித்து சிதறியது. அப்போது 8-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காயம் அடைந்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக புகை மண்டலம் உருவாகியுள்ளது. அனல் மின் நிலையத்திற்கு உட்பட்ட தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் இரங்கல்

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து ட்விட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. காயமுற்றோர் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாகவும் கருத்து.

ரூ. 3 லட்சம் நிதி உதவி

தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் போர் கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு ரூ. 3 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், சேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பது ஆயிரம் ரூபாயும் நிதியாக வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Explosion at a boiler in stage -2 of the NLC plant death toll rises to 5 Explosion at a boiler in stage -2 of the NLC plant death toll rises to 5

 

என்.எல்.சி. பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக முதல்வரிடம் பேசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்து வேதனையடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதல்வரிடம் பேசியதாகவும், அனைத்து உதவிகளையும் செய்ய உறுதி அளித்ததாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, நெய்வேலி என்.எல்.சி. விபத்தில் 7 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, என்.எல்.சி. 2வது அனல்மின் நிலைய முதன்மைபொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தி தொடர்பான அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Nlc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment