New Update
00:00
/ 00:00
தமிழ்நாட்டில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 14, 2024) முதல் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கால நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரயிறுதி மற்றும் பக்ரீத் பண்டிகையை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறை அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் 547 வெளி மாநில பதிவு எண் கொண்ட சுற்றுலா பேருந்துகள் விதிகளை மீறி இயக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், த.நா வாகனப் பதிவெண் பெறாத 547 ஆம்னி பேருந்துகளை இயக்க ஜூன் 14ஆம் தேதி முதல் தமி்ழ்நாடு அரசு தடை விதித்தது. இந்தத் தடை தற்போது நீக்கப்பட்டு, ஜூன் 17ஆம் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆம்னி பேருந்து சங்கத் தலைவர் அ. அன்பழகன், “வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் இயக்க முன்பு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை நீக்க போக்குவரத்து ஆணையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்து தொடர் விடுமுறை தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.