/indian-express-tamil/media/media_files/CDFFR25BVWIKT2hEm088.jpg)
மிக்ஜாம் புயல் பாதிப்பு எதிரொலியாக 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளித்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
chennai-rain | thangam-thennarasu | தமிழ்நாட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் கோரத்தாண்டவம் ஆடியது. இந்தப் புயல் காரணமாக ஏற்பட்ட மழைப் பொழிவு காரணமாக சென்னை நகரமே நீரில் மிதந்தது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் 30 செ.மீ.க்கும் அதிகமான மழைப் பொழிவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் அவர், “புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த டிச.18ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்படுகிறது.
கடந்த 03.12.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து 04.12.2023 அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து மாண்புமிகு…
— Thangam Thenarasu (@TThenarasu) December 6, 2023
மின் நுகர்வோர் டிச.4 முதல் 6 வரை அபராதம் செலுத்தி இருந்தால் அது அடுத்த மின் கட்டணத்தில் சரி செய்யப்படும். புயலால் மின்நுகர்வோரின் இடர்பாடுகளை கருதி முதலமைச்சர் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.