Advertisment

தமிழக அரசியலில் கால் பதிக்க முயலும் இந்து முன்னணி

இத்தகைய கருத்துகளுக்காக காவல்துறையினர் இந்து முன்னணி தலைவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும். இதுபோன்ற விஷமத்தனமான அறிக்கைகளுக்கு எதிராக மாநில காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
TN Urban Local Body Elections, local body polls Everything you need to know, dmk, aiadmk, congress, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை, திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, பாஜக, சிபிஐ, சிபிஎம், vck, bjp, cpi, cpm, pmk, mnm, naam tamilar katchi

Arun Janardhanan 

Advertisment

civic polls Hindutva fringe outfit seeks to make inroads : இந்து மத உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகளுக்கு ஆதரவு தர வேண்டும் மக்கள் என்று இந்து முன்னணி, வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவித்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய இந்து அமைப்பான இந்து முன்னணி தற்போது இந்து வாக்காளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இந்திய மதிப்பு மற்றும் கலாச்சாரத்திற்கு ஆதரவு அளிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும் என்றும் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அக்கட்சி. பிப்ரவரி 5ம் தேதி அன்று நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்யக் கோரும் அடிப்படையாக இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இந்து முன்னணி வரையறுக்கவில்லை. மாறாக, மாநில அரசியலில் கால் பதிக்கும் முயற்சியில் இந்து அடையாள அரசியலின் ஆதரவாளர்களை அணிதிரட்டுவதை அதன் நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சமாக மாற்ற முற்படுகிறது என்பது தெளிவாக தெரிகின்றது.

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம், அவர்களின் அமைப்பானது தேர்தலில் போட்டியிடாது என்று கூறியது. ஆனால் ஜமாத்தை பாருங்கள், இஸ்லாமிய சமூகத்தினரின் வாக்குகள் தொடர்பாக பெரிய பங்களிப்பை கொண்டுள்ளனர். அதே போன்று கிறித்துவர்களும் பல்வேறு பிரிவினராக இருந்தாலும் கூட, தேர்தல் என்று வரும் போது ஒருமித்த முடிவை எடுக்கின்றனர். அவர்கள் விவாதித்து ஒரு முடிவுக்கு வருகின்றனர். இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல. ஆனால் ஒரு சமூகமாக நாம் பிரச்சனைகளை சந்திக்கும் போது அத்தகைய கூட்டு மற்றும் ஒன்றுபட்ட இந்து முன்னணியை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதுவே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.

மதமாற்ற தடைச் சட்டத்தை தமிழகத்தில் இயற்ற வேண்டும் என்பது எங்களின் முக்கிய, நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கையை ஆதரிக்க யார் முன்வருகின்றார்களோ அவர்களுக்கு நாங்கள் எங்களின் ஆதரவை வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

பல காலகட்டங்களில் நடைபெற்ற தேர்தல்களில் தங்களின் ஆதரவை பாஜகவிற்கு வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், ஒரு வேட்பாளர் இந்துத்துவா ஆதரவாளராகவோ அல்லது பாஜகவின் ஆதரவைப் பெற்றவராக இருக்க வேண்டிய தேவையில்லை என்று அது இப்போது கூறியுள்ளது.

இறந்த திமுக தலைவர் ஜெ. அன்பழகனை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் விநாயகர் சதுர்த்தி போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றவர் தான். திமுகவில் இருக்கும் பல தலைவர்களுக்கும் இந்து மத நம்பிக்கைகள் உண்டு. ஆனால் அதனை அவர்கள் பொதுவெளியில் காட்டுவதில்லை. இதை தான் நாங்கள் கூற விரும்புகிறோஒம். இந்து மத நம்பிக்கைகளை கொண்ட/ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு நாங்கள் எங்களின் ஆதரவை வழங்குவோம் என்று கூறினார்.

பல ஆண்டுகளாக பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டங்களுக்கான பிரச்சாரங்கள் வெற்றி பெற்றுள்ளன என்று இந்து முன்னணி தலைவர் சுட்டிக்காட்டினார். தமிழகக் கட்சிகளிடமும் இதையே கோருகிறோம். திமுக., அதிமுக., என வரும்போது, எங்களின் பிரச்சனைகளை கூர்ந்து கவனிக்கும் கட்சியாக அதிமுக உள்ளது. ஆனால் அதிமுகவா அல்லது பாஜகவா என்ற கேள்வி வரும் போது எங்களுக்கு பாஜக சிறந்த கட்சியாக தோன்றுகிறது என்று அவர் கூறினார்.

மாட்டிறைச்சிக்கு தடை, பசுபாதுகாப்பு மற்றும் சுயபாணியில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் என பல்வேறு சர்ச்சைகளில் மூழ்கியிருக்கும் இந்த அமைப்பின் கருத்துகளுக்கு ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக பதில் அளிக்க மறுத்துவிட்டது. வெறும் “லெட்டர்ஹெட்டில்” மட்டும் இருக்கும் ஒரு அமைப்பின் கருத்துகளுக்கு நான் ஏன் பதில் அளிக்க வேண்டும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இவர்களின் அரசியல் முன்னெடுப்புகள் மக்கள் மத்தியில் எடுபடாது என்று கூறிவிட்டார்.

ஜாமாத்தோ, கோவிலோ அல்லது தேவாலயமோ, அங்கே மக்கள் இந்த கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூற யாரோ ஒருவர் இருக்கத்தான் செய்கிறார். ஆனால் மக்கள் சிறந்த தலைவர்கள் யாரோ அவர்களுக்கு தான் வாக்களிக்கின்றார்கள். ஏன்? ஏன் என்றால் நாம் அனைவரும் மதசார்பற்ற ஒரு நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இஸ்லாமியர்களின் வர்த்தகத்தால் இந்துக்கள் பயன் அடைகின்றனர். இந்துக்களின் வர்த்தகத்தால் இஸ்லாமியர்கள் பயன் அடைகின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் ஏன் மற்றவர்களின் மதத்தை காண வேண்டும்? தேர்தல் வரும்போது, தலைவரின் சமூகத்திற்கோ, மதத்திற்கோ அல்ல, சிறந்த தலைவருக்கே வாக்களிக்கிறார்கள் என்று கூறிய அவர் திமுகவில் இருந்தாலும் எப்போதும் நாத்திக அடையாளத்தை வெளிக்காட்டுவதில்லை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இது குறித்து கூறுகையில், 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இந்திய அரசு ஒரு மதசார்பற்ற அரசு என்றும், தேர்தல்களும் அம்முறையில் நடைபெறும் நிகழ்வு என்றும் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார். இந்தியாவில் மத அடிப்படையில் வாக்களிக்க பிரச்சாரம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இது சட்டத்திற்கு புறம்பான செயல். தேர்தல் செயல்முறைக்கு மத சாயம் பூசும் வகையில் வெளியிடப்படும் கருத்துகளுக்காக காவல்துறையின் இந்து முன்னணி தலைவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும். இதுபோன்ற விஷமத்தனமான அறிக்கைகளுக்கு எதிராக மாநில காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment