அறியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவர் தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி உள்ளார்.
ஆவடி வீராபுரம், ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த சிறுமி தானியா, இவர் கடந்த 6 வருடங்களாக முகச் சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு உதவி வேண்டும் என்று பல பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவிற்கு இணங்க ஸ்ரீபிரமதூர் அருகே உள்ள சவிதா மருத்துவமனையில் கடந்த மாதம் 17 தேதி அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு கடந்த மாதம் 23ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பால்வளத்துறை அமைச்சர் மற்றும் சிலரும் அவரின் உடல் நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து அறிந்தனர். சில நாட்களுக்கு முன்பு முதல்வரும் சிறுமியை காணச் சென்றார்.
இந்நிலையில் இன்று அவர் மருத்துவமனியிலிருந்து வீட்டுக்கு சென்றுள்ளார். மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த சிறுமி, ஸ்டாலின் புகைப்படத்திற்கு முத்தமிட்டு நன்றி தெரிவித்தார். மேலும் அவரை பால்வளத்துறை அமைச்சர் பாராட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.