DMK mouthpiece Murasoli shares pornographic clips: தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று (அக்.6) ஆபாச காட்சிகள் பகிரப்பட்டன. இந்த நாளோடு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் 1942ல் தொடங்கப்பட்டது ஆகும்.
இந்தப் ஃபேஸ்புக் பக்கத்தில் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதனை பா.ஜ.க பிரமுகர் எஸ்.ஜி சூர்யா தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் கலாய்த்து தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு ஆபாச படங்களும் முரசொலி பக்கத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனை சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் வலதுசாரி சிந்தனையாளர்கள் திமுக, கருணாநிதி, பெரியாரை தொடர்புபடுத்தி விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தி.மு.க. தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் முரசொலி பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில், “முரசொலி ஃபேஸ்புக் பக்கத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனில் பிட்காயின் மூலம் பணம் கொடுக்க வேண்டும் மிரட்டல்கள் வருகிறது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முரசொலி புதிய செயலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“