பொது இடத்தில் பெண்ணை கட்டிப்பிடித்தாரா தி.மு.க எம்.பி ஆ.ராசா? உண்மை என்ன?

தி.மு.க எம்.பி ஆ. ராசா பொது வெளியில் ஒரு பெண்ணை ஆ.ராசா கட்டியணைத்ததாக காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்து தெலுங்கு போஸ்ட் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க எம்.பி ஆ. ராசா பொது வெளியில் ஒரு பெண்ணை ஆ.ராசா கட்டியணைத்ததாக காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்து தெலுங்கு போஸ்ட் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Fact Check DMK MP A RAJA hugging woman in public viral photo Tamil News

தி.மு.க எம்.பி ஆ. ராசா பொது வெளியில் ஒரு பெண்ணை ஆ.ராசா கட்டியணைத்ததாக காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.


தி.மு.க எம்.பி ஆ. ராசா பொது வெளியில் ஒரு பெண்ணை ஆ.ராசா கட்டியணைத்ததாக காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அதன்  உண்மைத் தன்மை குறித்து தெலுங்கு போஸ்ட்  சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட்  (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment

சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படும் போதும், அதன் உண்மை பின்னணியை அறியாமல் பலரும் அதனை பகிரும் சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக அரசியல், சினிமா மற்றும் விளையாட்டுத் துறைகள் சார்ந்த பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய தகவல்கள் என்றால், மிக எளிதாக பரவும் தன்மை சமூக ஊடக பயனர்களிடம் காணப்படுகிறது. அவ்வகையில்,  தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா ஒரு பெண்ணை பொதுவெளியில் கட்டியணைத்ததாக காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. 

தி.மு.க-வின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும் ஆ.ராசா இருக்கிறார். அவர் தற்போது நீலகிரி மக்களவை தொகுதியின் உறுப்பினராகவும் உள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். திராவிட இயக்கம் தொடர்பான ஆ.ராசாவின் பேச்சுகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதே சமயம், அவரது பேச்சுகள் சில சமயங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. தற்போது ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக மக்களவையில் முழங்கக் கூடிய முக்கிய நபர்களில் ஒருவராக ஆ.ராசா உள்ளார்.

இந்நிலையில், பொது வெளியில் பெண் ஒருவரை ஆ.ராசா கட்டியணைப்பது போல ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து தெலுங்கு போஸ்ட்  சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட்  (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment
Advertisements

இது தொடர்பான செய்தியினை எக்ஸ் தளம் மற்றும் பல சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனங்களுடன் ஆ.ராசா புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். ஒருபயனர், “திராவிட கருமம் புடிச்சவங்க” என குறிப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டார். இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து அதிகமாக பகிரப்பட்டதால், புகைப்படம் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது. இதன் உண்மை நிலையை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் தெலுங்கு போஸ்ட் உண்மைச் சரிப்பார்ப்பு குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. 

உண்மைச் சரிபார்ப்பு 

தெலுங்கு போஸ்ட் குழு முதலில் புகைப்படத்தை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்துள்ளனர். அப்போது சில விடயங்கள் சந்தேகத்திற்கு உரியவையாக இருந்துள்ளன. குறிப்பாக, ஆ.ராசாவின் உடை. அவர் பெரும்பாலும் சட்டை-வேட்டி அல்லது சட்டை-பேண்ட் அணிவதை வழக்கமாக கொண்டவர். ஆனால், வைரலாகும் புகைப்படத்தில் அவர் வெள்ளை நிற ஜிப்பா அணிந்திருப்பது போல இருந்தது.

புகைப்படத்தில் இருக்கும் முகம் மற்றும் உடல் அமைப்பை நுணுக்கமாக கவனித்தால், தலைமுடி பகுதி வெட்டி ஒட்டியதுபோல் காணப்பட்டது. முகத்தின் முன்பகுதி மற்றும் மூக்குப் பகுதியின் தோல்நிறத் தோற்றத்தில் வேறுபாட்டினை காண முடிந்தது. மேலும் ஆ.ராசா அவர்களின் உடல் அமைப்பு மிக ஒல்லியாக இருப்பது, இயல்பான அவரின் தோற்றத்துக்கு மாறுபட்டதாக உள்ளது. இதன் மூலம், புகைப்படம் மாற்றப்பட்டிருக்கலாம் என யூகித்துள்ளனர்.  

இதனை உறுதிப்படுத்துவதற்காக முதலில் கூகுள் லென்ஸ் (Google Lens) மூலம் Reverse Image Search செய்துள்ளனர். அப்போது, இந்த புகைப்படம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எடுத்தது என்பதைக் கண்டறிந்துள்ளனர். மேலும், புகைப்படத்தில் உள்ளவர் ஆ.ராசா அல்ல என்பதும் உறுதியாக நிரூபிக்கப்படுள்ளது. அந்தப் புகைப்படத்தில் இருப்பது, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்பிரியா சுலே மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே ஆவார்.

மேலும் கடந்த 2019ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடைப்பெற்றது. அதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சி உறுப்பினர்கள் வெற்றி பெற்று, முதல் நாள் சட்டமன்ற கூட்டத்திற்கு வந்துள்ளனர். அப்போது, என்.சி.பி - எஸ்.பி கட்சியை சேர்ந்த எம்.பி., சுப்ரியா சூலே (சரத் பவார் மகள்) அவர்களை வரவேற்றார். 

அந்த நிகழ்வின்போது, சிவசேனா (UBT) கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தாக்கரேவை சுப்ரியா சூலே ஆரத்தழுவினார். அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, உணர்ச்சிவசப்பட்டு சுப்ரியா சுலே, ஆதித்யா தாக்கரேவை கட்டியணைத்த புகைப்படமாக இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியினை புகைப்படத்துடன் இந்தியா டுடே, நேஷனல் ஹெரால்டு மற்றும் அமர் உலாஜா போன்ற ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இறுதியில், சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் மாற்றியமைக்கப்பட்ட ஒன்று என்றும், பொது வெளியில் ஒரு பெண்ணை ஆ.ராசா கட்டியணைப்பது போல வைரலாகும் மாற்றி அ மைக்கப்பட்ட புகைப்படம் என்றும், அதில் இருப்பவர் ஆதித்யா தாக்கரே என்பதுதான் உண்மை என்பதையும் தெலுங்கு போஸ்ட் குழு கண்டறிந்துள்ளது. ஆ.ராசா ஒரு பெண்ணை கட்டிப் பிடித்ததாக தவறான தகவல் பரவுகிறது என்றும் அவர்கள் நிரூபித்துள்ளனர். 

இந்த உண்மைச் சரிபார்ப்பு தெலுங்கு போஸ்ட்  (Telugu Post.com) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://www.telugupost.com/Tamil-FactCheck/viral-video-claiming-students-from-tamil-nadu-attacking-each-other-is-false-1571410

 

Fact Check A Raja Viral Photo Dmk Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: