நாடார் சமுதாயம் குறித்து எச். ராஜா தவறாகப் பேசியதாகவும், அதற்கு பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார் என்றும் குறிப்பிட்ட புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
நாடார் சமுதாயத்தினர் தமிழர்கள் அல்ல என பா.ஜ.க தலைவர் எச்.ராஜா பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது. மேலும் அதில், தன் மீதும் தமிழிசை சௌந்தரராஜன் மீதும் எச். ராஜாவுக்கு இருக்கும் கோபத்தை நாடார் சமூகத்தின் மீது காட்டுவது தவறு என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
/indian-express-tamil/media/post_attachments/a4d3d03a-8bc.jpg)
உண்மைச் சரிபார்ப்பு
முதலில், எச்.ராஜா நாடார் சமூகத்தினரை தமிழர்கள் அல்ல என்று கூறினாரா? என்பது குறித்து நியூஸ் மீட்டர் தரப்பில் தேடப்பட்டுள்ளது. அப்போது, 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி இதுதொடர்பாக தினமலர் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “கால்டுவெல், நாடார் சமூகத்தை பற்றி குறிப்பிட்டதை சமீபத்தில், ஒரு மேடையில் பேசினேன். அது, என் கருத்து என்பது போல, சமூக வலைதளங்களில் பரப்பி, என்னை சர்ச்சைக்குள்ளாக்கினர்” என்று எச். ராஜா தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக உண்மைச் சரிபார்ப்பு (ஃபேக்ட்செக்) செய்து பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
/indian-express-tamil/media/post_attachments/fe69615b-e35.jpg)
தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதற்கு கண்டனம் தெரிவித்தாரா? என்பது குறித்து கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, அவர் கண்டனம் தெரிவித்ததாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. அவரது சமூக வலைதள பக்கங்களிலும் நியூஸ் மீட்டர் ஆய்வு செய்துள்ளனர். அப்போதும் அவர் எச். ராஜா குறித்து எந்த ஒரு கண்டனத்தையும் வெளியிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/56d429dd-743.jpg)
இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் நியூஸ் கார்டு போன்று புதிய தலைமுறை ஊடகம் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளதா என்று அதன் சமூக வலைதள பக்கங்களில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அதிலும் வைரலாகும் நியூஸ் கார்டு போன்ற எதுவும் வெளியிடப்படவில்லை என்று தெரியவந்தது. தொடர்ந்து, புதிய தலைமுறை ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு வைரலாகும் நியூஸ் கார்டு உண்மைதானா? என்று கேட்டறிந்துள்ளனர். அதற்கு புதிய தலைமுறை ஊடகம் தரப்பினர், அது போலி என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இறுதியில், நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில், நாடார் சமுதாயம் குறித்து தவறாகப் பேசிய பா.ஜ.க தலைவர் எச். ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் என்று வைரலாகும் புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்டு போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
https://newsmeter.in/fact-check-tamil/pon-radhakrishnan-condemn-h-raja-for-speaking-about-the-nadar-community-745830