உதயநிதியின் கீழ் இயங்கும் உண்மை கண்டறியும் அரசு குழு: தமிழகம் முழுவதும் 80 பேரை தேர்வு செய்ய முடிவு

சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடக தளங்களிலும் வெளியாகும் தமிழக அரசு தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கு உண்மை சரிபார்க்கும் பிரிவை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. இந்நிலையில் இந்த பிரிவு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் கீழ் செயல்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
news

சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடக தளங்களிலும் வெளியாகும் தமிழக அரசு தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கு உண்மை சரிபார்க்கும் பிரிவை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. இந்நிலையில் இந்த பிரிவு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் கீழ் செயல்பட உள்ளது.

Advertisment

சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடக தளங்களிலும் வெளியாகும் தமிழக அரசு தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கு உண்மை சரிபார்க்கும் பிரிவு ஒன்றை உருவாக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அக்டோபர் 6-ம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், உண்மைச் சரிபார்ப்புப் பிரிவின் கீழ் மத்திய பணிக்குழு செயல்படும் என்றும், இந்த திட்டம் இயக்குநரால் வழிநடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்புப் பிரிவின் பணி இயக்குநராக ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த பிரிவின் கீழ் செயல்பட தமிழகத்திலிருந்து  80 பேரை நியமிக்க உள்ளனர். மேலும் இந்த பிரிவு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தை தங்கள் பணிக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உண்மைச் சரிபார்ப்புப் பிரிவின் பணி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஐயன் கார்த்திகேயனுக்கு மாதம் ரூ. 3 லட்சம் சம்பளமாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  

 தமிழக அரசு உருவாக்கியுள்ள இந்த உண்மை சரிபார்ப்பு பிரிவு, சமூக ஊடகங்கள் மட்டுமில்லாமல், அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றின் தகவல் தொடர்பான புகார்களை மத்திய பணிக்குழு எடுத்துக்கொள்ளும். மாநில அரசு தொடர்பான எந்தத் தகவலையும் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கு அவர்கள் தானாக முன்வந்து ஊடக விஷயங்களை எடுக்கலாம். அவை உண்மை சரிபார்ப்புப் பிரிவின் வரம்பிற்குள் வருமா என்பதைப் பார்க்க, இந்த தகவல்களைப் பிரித்து அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க பல்வேறு உண்மைச் சரிபார்ப்புக் கருவிகளைப் பயன்படுத்தும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில் அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. ’அரசு இதுபோன்ற பிரிவை உருவாக்குவது, அரசை எதிர்க்கும் நபர்களை அச்சமூட்டும் செயல்’ என்று அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் விமர்சித்துள்ளார்.  

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: