ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே, சனிக்கிழமையன்று திரவ குளோரின் கையாளும் தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆலையின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார் மற்றும் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு அருகே திரவ குளோரின் தொழிற்சாலையை நடத்தி வரும் தாமோதரன் (43), அவர் நிரப்பிக் கொண்டிருந்த சிலிண்டரில் இருந்து வாயு கசிந்ததால் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தொழிற்சாலையில் இருந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்செயலாக புகையை சுவாசித்ததாகவும் அவர்களில் 13 பேர் மயங்கி விழுந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதைப் பார்த்த மற்ற ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர், அவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். சிலிண்டரில் இருந்து கசிவை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
மேலும், மூச்சுத் திணறிய தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும், அவர்களுக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் கூறியதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil