திருச்சி சிந்தாமணி, அண்ணாசிலை முன்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் 40 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக நேற்று முன்தினம் 39-வது நாள் போராட்டத்தில் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறி, வெண்டைக்காயை மாலையாக அணிந்தும், சாலையில் கொட்டியும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் நேற்று முன்தினம் மாலையே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரின் தடையை மீறியும், பொது மக்களுக்கு இடையூறாகவும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் போராட்டம் நடத்திய அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது 7 பிரிவுகளின் கீழ் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“