scorecardresearch

கோவையில் கத்தை கத்தையாக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல்.. மூவர் கைது

போலீசார் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக ரூ.2,000 போலி நோட்டுகள் அட்டை பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவையில் கத்தை கத்தையாக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல்.. மூவர் கைது
கோவையில் போலி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில போலியான 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டபோது அங்கு கட்டு கட்டாக ரூ.2,000 போலி நோட்டுகள் அட்டை பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த விருதுநகரை சேர்ந்த காளிமுத்து, நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஒன்பது அட்டை பெட்டிகளில் இருந்த போலி 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் இரண்டு கோவில் கலசம், லேப்டாப்,
4 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஜடகோபால் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இருடியம் இருப்பதாக சொல்லி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தகவல் தெரிய வந்துள்ளது.

பிடிபட்ட நபர்களிடம் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் பி ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Fake 2000 rupees notes confiscation in coimbatore three arrested