Advertisment

மகளிருக்கு ரூ1000 விண்ணப்பம் வெளியானதா? கொதிக்கும் எதிர்கட்சிகள்

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை விவகாரத்தில், போலி விண்ணப்ப வினியோகம் செய்வோரை கைது செய்ய வேண்டும். மோசடியை தடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மகளிருக்கு ரூ1000 விண்ணப்பம் வெளியானதா? கொதிக்கும் எதிர்கட்சிகள்

தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

அண்மையில், திண்டுக்கல்லில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விரைவில் மகளிர் உரிமை தொகையான மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக, பரப்புரைக்கு சென்ற எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம், மாதம் ஆயிரம் ரூபாய் எப்போது தருவீர்கள் என பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு நிச்சயம் வழங்குவோம் என பதிலளித்தார்.

எப்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கேள்வி பல நாள்களாக மக்கள் மத்தியில் இருந்த நிலையில்,முதல்வரின் திடீர் வாக்குறுதி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தேர்தலுக்காக முதல்வர் இப்படி சொல்வதாக, எதிர்கட்சிகள் தெரிவித்து வந்தனர்.

போலி விண்ணப்பம்

இந்நிலையில், சமூக வலைதளங்களில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்டு விண்ணப்பம் ஒன்று வைரலாகி வருகிறது. பல ஊர்களில் அந்த விண்ணப்பம் பெண்களுக்கு விநியோகம் செய்வதாகவும், ரேஷன் கடை ஊழியர்கள் வழியாக ரேஷன் கார்ட் அட்டைத்தாரர்களுக்கு வழங்க முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

திட்டம் தொடர்பாக அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், போலியான விண்ணப்பம் தயாரித்து விநியோகம் செய்வதாகவும், அதனை தடுக்கக்கோரி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக ட்வீட் செய்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை; பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை.

விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் விண்ணப்பத்தை வினியோகித்து வருகின்றனர். அதன் பின்னணியில் முறைகேடு செய்யும் நோக்கம் இருக்கலாம்.

இந்த மோசடிக்கு முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தக்கூடாது; விண்ணப்ப வினியோகத்தை தடுக்க வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் வினியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மோசடியாக வினியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Dmk Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment