ஆளுநர் பெயரில் போலி மெயில்ஐடி…… ராஜ்பவன் போலீசில் புகார்

ஆளுநர் என்.வி ரவி பெயரில் போலியான இமெயில் கணக்கு உருவாக்கப்பட்டு பலருக்கு ஆட்சேபனைக்குரிய கருத்துகள் அனுப்பப்படுவதாகப் புகார்

தமிழக ஆளுநராக என்.வி ரவி, கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது, அவர் குடும்பத்துடன் சுற்றுப்பயணமாக நீலகிரி சென்றுள்ளார். இந்நிலையில், ஆளுநர் என்.வி ரவி பெயரில் போலியான இமெயில் கணக்கு உருவாக்கப்பட்டு பலருக்கு தவறான கருத்துகள் அனுப்பப்படுவதாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஆளுநர் மாளிகை, ” சமூக விரோதிகள் ஆளுநரின் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி ஆட்சேபகரமான கருத்துகளை பரப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தி இமெயில் உருவாக்கியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் இதர சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் govtam@nic.in , அதிகாரப்பூர்வ ட்விட்டர் @rajbhavan_tn. எனவே, பொதுமக்கள் இதர போலி மெயில்ஐடி மற்றும் ட்விட்டர் கணக்குகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்” என குறிப்பிட்டிருந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Fake email account created for tn governor nv ravi

Next Story
தமிழக விவசாயிகள் போராட்டம்… பயன்களும் கடக்க வேண்டிய தூரமும்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com