கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட சென்னையைச் சேர்ந்த போலி சித்த மருத்துவர் தணிகாசலம் புதன்கிழமை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பரவலைத் தடுக்க இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக சமூக ஊடகங்களில் விடியோ வெளியிட்டு பரபரபை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், தணிகாசலம், மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாத போலி சித்த மருத்துவர் என்று தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனால், பொதுமக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் போலி சித்த மருத்துவர் தணிகாசலம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தணிகாசலத்திடம் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரை ஐடி சட்டத்திலும் அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டது மற்றும் நோய்த்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று மருந்து கண்டுபிடித்துள்ளதாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட போலி சித்த மருத்துவர் தணிகாசலத்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Fake siddha doctor thanikasalam arrested
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை