சிவகங்கை மாவட்டம், திருமன்பட்டியை சேர்ந்த சந்திரன் - ரஞ்சிதா தம்பதியர்களுக்கு நான்கு வயதில் கீர்த்தி என்ற பெண் குழந்தையும் மூன்று வயதில் சங்கீதா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கணவர் மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் தாய் ரஞ்சிதா கீழப்பூங்குடி அய்யனார் கோவில் அருகேயுள்ள கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இருவரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்வுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மதகுபட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தாய் ரஞ்சிதா திருமலை என்ற பகுதியில் தலைமறைவாகி இருந்ததை அறிந்த அப்பகுதி பொது மக்கள் தாயைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தகராறில் பெற்ற தாயே தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: சக்தி சரவணன் - சிவகங்கை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“