தமிழகம் மற்றும் கேரள பகுதியில் கோவில் திருவிழாக்களில் நூதனமாக தங்கச் செயினை திருடி சிங்கப்பூர் மலேசியா வெளிநாடு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குடும்பம்.
Advertisment
கோவையில் பல்வேறு திருவிழாக்களில் பெண்களின் தங்க செயினை திருடும் கும்பல் பிடிக்க காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இதில் உதவி ஆய்வாளர் மாரிமுத்து. மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை தேடி வந்த நிலையில் கோவை தெலுங்கு பாளையம் பகுதி பாரதியார் ரோட்டில் வசிப்பவர் ராமு இவரது மனைவி நாகம்மாள் இவர்களது மகன் சத்யா இவருடைய மனைவி நந்தினி இவர்கள் காரில் தமிழகம் மற்றும் கேரளா ஊர் ஊராகச் சென்று எங்கு கோவில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறுகிறதோ அங்கு சென்று கூட்டத்தில் பெண்களுடைய நகைகளை கொள்ளை அடிப்பது வழக்கம்.
அதே போல நாகம்மாள் பஸ்ஸில் ஏறி உடன் பயணிக்கும் பெண்களிடம் நகை திருடுவார் அடுத்த ஸ்டாப்பில் பஸ்ஸில் இருந்து இறங்கிக்கொள்வார் அவரை காரில் செல்லும் கணவர் பஸ் பின்புறம் பின் தொடர்வார் அல்லது அவரது மகன் பிக்கப் செய்து கொள்வர் இவ்வாறு சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்தினர் உல்லாசமாக செலவு செய்து உள்ளனர்.இவர்களிடமிருந்து மாருதி சுசுகி கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இவர்கள் பொள்ளாச்சி கும்பகோணம் பாலக்காடு கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.அந்தந்த பகுதியில் தங்கும் இவர்கள் 10 அல்லது 15 நாட்கள் மட்டுமே தங்கி விட்டு செல்வார்கள் இவர்கள் கொள்ளையடித்த பணத்தில் கோவையில் சொந்த வீடு வாங்கியதும் தெரியவந்துள்ளது.
சத்யாவின் மனைவி நந்தினி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கேரள எர்ணாகுளம் சிறையில் இருப்பதும் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
இந்த குடும்பத்தினர் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன கொள்ளையடித்த பணத்தில் மலேசியா சிங்கப்பூர் அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு குடும்பத்தினர் உல்லாச சுற்றுலா சென்று வந்து உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட மூவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நூதனமாக ஒரு குடும்பமே சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: ரகுமான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.