சென்னை பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. காந்தி சிலை அருகே, மெட்ரோ ரயில் நிலையம், அதன் கீழ் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகளால், காந்தி சிலை சேதமடைவதை தடுக்க, சிலையை இடமாற்றம் செய்ய, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 60 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“சிலை பாதுகாப்பாக அகற்றப்பட்டு, ரிப்பன் கட்டிடத்தின் நுழைவு வாயிலில் இடமாற்றம் செய்யப்படும். பாதாள மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி முடிந்ததும், சிலை மீண்டும் மெரினா கடற்கரைக்கு மாற்றப்படும். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
தேபி பிரசாத் ராய் சௌத்ரி அவர்களால் செதுக்கப்பட்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல்வர் கே.காமராஜ் முன்னிலையில் 1959 ஆம் ஆண்டு, 12 அடி வெண்கல காந்தி சிலை கடற்கரையில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“